• December 18, 2021 7:52 am
  • Tiruppur, Tamilnadu

திருப்பூர் – பூலுவப்பட்டி சாலை, கே.ஜி.புதூரில் ஏபிஎஸ் அகாடமிக் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் நான்கு வயது பெண் குழந்தைக்கு கடந்த 14 ஆம் தேதி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக நேற்று காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரினை தொடர்ந்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் பள்ளியில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை வரை என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள் என காவல்துறை தரப்பில் குழந்தையின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் மற்றும் குழந்தையின் உறவினர்கள் பள்ளியின் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளியை கைது செய்ய தாமதபடுத்துவதாகவும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்ட போது , குழந்தையின் பெற்றோர் இது தொடர்பாக கூறியதும் பள்ளியின் அனைத்து சிசிடிவிகளையும் ஆய்வு செய்துவிட்டதாகவும் , அப்படி ஒரு சம்பவம் பள்ளியில் நடைபெறவில்லை என்றும் கூறுகின்றனர். மேலும் , சிசிடிவி காட்சி பதிவுகளை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறினர். இந்த புகார் தொடர்பாக தற்போது வரை காவல்துறை சார்பில் வழக்கு பதிவுசெய்யப்படாத நிலையில் , விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Location

Tiruppur,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service